மலேரியா நோய்
Malaria
மலேரியா என்பது நோய் பரப்பி அல்லது நோய்க்காவி வாயிலாக பரவும் தொற்றுப்பண்புடைய ஒரு தொற்றுநோயாகும். இது முதற்கலவுரு ஒட்டுண்ணிகள் மூலம் ஏற்படுகிறது. அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளையும் சேர்த்து வெப்ப வலயம் சார்ந்த மற்றும் மிதவெப்ப மண்டல பிரதேசங்களிலும் இது பரவலாகக் காணப்படுகிறது.
ஒவ்வொரு
ஆண்டும் தோராயமாக 350 முதல் 500 மில்லியன் வரையிலான மக்கள் மலேரியா நோயினால்
பாதிக்கப்படுகிறார்கள். அவற்றில் ஒன்றிலிருந்து மூன்று மில்லியன் மக்கள் இந்த
நோயினால் இறக்கிறார்கள். இந்த நோயின் காரணமாக இறப்பவர்களில் அதிகமானவர் சப்-சஹாரா
(Sub-Saharan) ஆப்பிரிக்காவில் இருக்கும் இளம்
குழந்தைகளாவர்.
மிகவும்
பொதுவான தொற்றுநோய்களில் மலேரியாவும் ஒன்றாகும். இது பொதுச்சுகாதாரத்திற்கு
மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
பேரினம் பிளாஸ்மோடியம் (மலேரியா நோய்க்காரணி என்னும் முதற்கலவுரு
ஒட்டுண்ணிகளினால் இந்த நோய் ஏற்படுகிறது. பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியின் ஐந்து
வகை இனங்கள் மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம்;
நோயின்
மிகவும் கடுமையான தன்மை
- பிளாஸ்மோடியம்
ஃபால்ஸிபாரத்தனால்
ஏற்படுத்தப்படுகிறது. பிளாஸ்மோடியம் விவக்ஸ் (Plasmodium vivax),
- பிளாஸ்மோடியம்
ஓவலே (Plasmodium ovale) மற்றும்
- பிளாஸ்மோடியம்
மலேரியா (Plasmodium malariae) ஆகியவற்றின் காரணத்தினால் ஏற்படும் மலேரியா
மனிதர்களுக்கு மிகவும் லேசான நோய்த் தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. இதற்கு பொதுவாக
கொல்லும் தன்மை இல்லை.
ஐந்தாவது
இனமான பிளாஸ்மோடியம்
நோலெசி (Plasmodium knowlesi), குட்டை வால் குரங்குகளுக்கு மலேரியா நோய்
தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது மனிதர்களுக்கும் நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம்.
மனிதர்களுக்கு நோய்விளைவிக்கும் தன்மையைக் கொண்ட இந்த வகை பிளாஸ்மோடியம் இனங்கள்
வழக்கமாக மலேரியா ஒட்டுண்ணிகள்
என்று கருதப்படுகின்றன.
வழக்கமாக
நோய்க்காவியான பெண் அனாஃபிலிஸ் (Anopheles) கொசு அல்லது
நுளம்பு மக்களைக் கடிப்பதன் மூலம் மலேரியா நோய் ஏற்படுகிறது. அனாஃபிலிஸ் (Anopheles) கொசுக்களினால் மட்டுமே மலேரியா நோய் மற்றவர்களுக்கு
பரவுகிறது.
- நோய்த்தொற்று ஏற்பட்ட ஒரு நபரிடமிருந்து இரத்த உணவை உட்கொள்ளும்போது
அவை அவரிடமிருந்து நோய்க்காரணியான பிளாஸ்மொடியம் ஒட்டுண்ணியைப் பெற்று வேறொரு
நபரில் இரத்த உணவை உண்ணும்போது அவருக்கு அந்நோயை கடத்துகிறது. நோய்த்தொற்றுடைய
கொசு ஒரு நபரைக் கடிக்கும் போது சிறிய அளவு இரத்தத்தை எடுத்துக்கொள்கிறது.
- அந்த
இரத்தத்தில் நுண்ணிய மலேரியா ஒட்டுண்ணிகள் இருக்கின்றன. சுமார் ஒரு வாரத்திற்கு
பிறகு அந்தக் கொசு அதனுடைய அடுத்த இரத்த உணவை எடுத்துக்கொள்வதற்காக மற்றொரு நபரைக்
கடிக்கும் போது இந்த ஒட்டுண்ணிகள் கொசுவின் உமிழ் நீரில் கலந்து அந்த நபருக்கு
செலுத்தப்படுகிறது.
- இந்த ஒட்டுண்ணிகள் இரத்த சிவப்பணுக்களில் பெருக்கமடைந்து
ஏற்படுத்தும் அறிகுறிகளாவன: இரத்த சோகை (தலை லேசாக இருப்பதுப் போல் உணருதல், சுவாசித்தலில் சிரமம் ஏற்படுதல், இதயத்
துடிப்பு மிகைப்பு, இன்னும் பல). மற்ற பொது அறிகுறிகளாவன:
காய்ச்சல், கடுங்குளிர், குமட்டல், ஃப்ளூ போன்ற உடல்நலக் குறைவு மற்றும் சில நோயாளிகளுக்கு
நோய் தீவிரம் அடைவதன் காரணத்தினால் ஆழ்மயக்கம் (கோமா) மற்றும் மரணம் நேரிடலாம்.
கொசு வலைகள் மற்றும் பூச்சி விலக்கிகள் ஆகியவற்றின் மூலம் கொசு கடிக்காமல்
தடுக்கலாம் அல்லது வீடுகளுக்கு உள்ளே பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தல் மற்றும்
கொசுக்கள் முட்டையிடும் தேங்கு தண்ணீரை வடித்து அகற்றுதல் போன்ற கொசுக்
கட்டுப்பாடு நடவடிக்கைகள் மூலம் மலேரியா நோய்த்தொற்று பரவுதலை குறைக்கலாம்.
- பல
வித்தியாசமான முறைகளின் மூலம் மலேரியா தடுப்புமருந்துகள் கண்டுபிடிப்பதற்கு
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை சிறிது வெற்றியும் கொடுத்தது. கொசுக்களுக்கு
ஒட்டுண்ணியை எதிர்க்கும் சக்தியை உருவாக்குவதற்காக கொசுக்களுக்கு மரபியல் ரீதியாக
சில மாற்றங்கள் செய்யப்படுவதும் கருத்தில் கொள்ளப்பட்டன.
- சில
தடுப்புமருந்துகள் உருவாக்கத்திலிருந்தாலும் மலேரியாவிலிருந்து முழுவதுமாக
பாதுகாப்பு தரும் தடுப்பு மருந்து எதுவும் தற்போது கிடைப்பதில்லை[5]; நோய்த்தொற்றின் ஆபத்தை குறைப்பதற்கு தடுப்புமருந்துகளை
தொடர்ந்து எடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.
- ஆண்டு முழுவதும் நோய் தோன்றும்
பகுதிகளில் வாழும் மக்களுக்கு இந்த ப்ரோஃபிலாக்டிக் (நோய் வருவதற்கு முன்னதாகவே
தடுக்கும் மருந்துப் பொருள்) மருந்து சிகிச்சைகள் அதிகமான செலவை ஏற்படுத்துவதாக
இருக்கிறது. ஆண்டு முழுவதும் நோய் தோன்றும் பகுதிகளில் வசிக்கும் வயதுவந்தவர்கள்
பலருக்கு நீண்டக் கால நோய்த்தொற்று இருக்கிறது. இந்த நோய் திரும்ப திரும்ப
ஏற்படுவதனால் இவர்களுக்கு அந்நோய்க்குரிய நோய் எதிர்ப்பாற்றல் முறைமை (நோய்
எதிர்ப்பு திறன்) ஏற்படுகிறது;
- சில நாட்கள் கழித்து
இந்த தடுப்பாற்றல் குறைந்துவிடும். இந்த வயந்துவந்தவர்கள் ஆண்டு முழுவதும் நோய்
தோன்றாத பகுதிகளில் சில நாட்கள் கழித்திருந்தார்களானால் இவர்களுக்கு கடுமையான
மலேரியா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆண்டு முழுவதும் நோய் தோன்றும்
பகுதிகளுக்கு இவர்கள் திரும்பவும் வருவதாக இருந்தால் நோய் வராமல் தடுப்பதற்குரிய
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுக்கவேண்டும் என்று
பரிந்துரைக்கபடுகிறது
- . குயினைன் (quinine) அல்லது
ஆர்டிமிஸினின் (artemisinin)
மூலம் செய்யப்பட்ட
மருந்துகள் போன்ற மலேரியா எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்தி மலேரியா
நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனினும் இது போன்ற பல மருந்துகளை
எதிர்க்கும் தன்மையுடையதாக ஒட்டுண்ணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் உலகத்தின் சில
பகுதிகளில் சிறிய அளவிலான மருந்துகளே மலேரியாவின் சிகிச்சைகளில் பயனுள்ளதாக
இருக்கிறது.
மனித உடலில் மலேரிய ஒட்டுண்ணிகளின் வாழ்க்கை சுழற்சி இரத்த உணவை எடுத்துக்கொள்வதின் மூலம் கொசு ஒருவருக்குத் தொற்றை ஏற்படுத்துகிறது. முதலில் வித்துயிரி குருதியோட்டம் வழியாக நுழைந்து கல்லீரலிற்கு நகர்ந்து செல்கிறது. அவைகள் கல்லீரல் உயிரணுக்களை (ஹெபட்டோசைட்கள்) பாதித்து அங்கே வளருயிரியாக பெருக்கமடைகின்றன. பிறகு கல்லீரல் உயிரணுக்களை கிழித்து குருதியோட்டத்திற்கே மறுபடியும் சென்றுவிடுகின்றன. அதற்கு பிறகு வளருயிரிகள் இரத்த சிவப்பணுக்களை பாதித்து அங்கே வட்டவடிவமாக உருவாகிறது. அதன் பின்பு வளர்விலங்குயிரியாகவும் (உணவளித்தல் நிலை), பிளப்புயிரியாகவும் (இனப்பெருக்க நிலை) மாறி வளருயிரியின் உள்ளே மறுபடியும் சென்றுவிடுகிறது. புணரிச்செல்கள் (gametocytes) என்றழைக்கப்படும் பால் ரீதியான வடிவங்களும் உற்பத்தி செய்யப்படும். இதை ஒரு கொசு எடுத்துக்கொள்ளும் போது அதற்கு தொற்று ஏற்படுத்திவிட்டு அதனுடைய வாழ்க்கை சுழற்சியை அங்கே தொடரும்.
அறிகுறிகள்:
- மலேரியாவின் அறிகுறிகளாவன: காய்ச்சல், உடல் நடுக்கம், மூட்டுவலி (மூட்டுகளில் வலி ஏற்படுதல்), வாந்தி, இரத்த சோகை (இரத்தமழிதலினால் ஏற்படுகிறது), ஈமோகுளோபின் நீரிழிவு, விழித்திரை சேதமடைதல்.
- வலிப்புகள். சுழற்சி முறையில் ஏற்படும் திடீர் குளிர்மத்தைத் தொடர்ந்து குளிர்நடுக்கம் ஏற்படும். அதன் பிறகு காய்ச்சலும் வியர்வையும் 4 முதல் 6 மணி நேரம் வரை இருக்கும். இவைகள் மலேரியாவின் முதல்நிலை அறிகுறிகளாகும்.
- P. விவக்ஸ் மற்றும் P. ஓவலே நோய்த்தொற்றுகளாக இருந்தால் ஒவ்வொரு இரண்டு நாட்களும் இது போன்று ஏற்படும். P. மலேரியா நோய்த்தொற்றாக இருந்தால் ஒவ்வொரு மூன்று நாட்களும் இது போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
- P. பால்சிபாரத்தனால் (falciparum) ஏற்படும் நோய்த்தொற்றாக இருந்தால் ஒவ்வொரு 36 முதல் 48 மணி நேரங்கள் அல்லது அதற்கும் குறைவான நேரங்களுக்கு காய்ச்சல் திரும்பத் திரும்ப வரும் (விட்டு விட்டு) மற்றும் காய்ச்சல் தொடர்ந்து இருந்துக்கொண்டே இருக்கலாம். இதற்கான காரணம் இன்னும் சரியாக தெரியாவிட்டாலும், உயர் மண்டையக அழுத்தத்தின் காரணத்தினாலும் இது போன்ற அறிகுறி ஏற்படலாம்.
- மலேரியாவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வழக்கத்திற்கு மாறாக உடல் இருக்கை நிலையை வைத்திருப்பதுப் போல் காணப்படுவார்கள். மூளை கடுமையாக பாதித்ததன் காரணத்தினாலும் இது இருக்கலாம்.அறிந்துகொள்ளும் அறிவாற்றலை மலேரியா பாதிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இந்த பாதிப்பு குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. மூளை வளர்ச்சி அதிவேகமாக இருக்கும் காலத்தின் போது இரத்த சோகையையும் நேரடி மூளை பாதிப்பையும் இது ஏற்படுத்துகிறது. குழந்தைகள் மிகவும் எளிதாக பாதிப்படைய கூடிய பெருமூளைச்சிரைக்குரிய மலேரியாவினால் நரம்பியல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது. பெருமூளைச்சிரைக்குரிய மலேரியா விழித்திரை வெண்மையாகுதலுடன் தொடர்புடையதாக இருக்கிறது.மற்ற காய்ச்சலிருந்து இந்த அறிகுறி தான் இந்த நோயைவேறுபடுத்திக் காட்டுகிறது.
- மலேரியாவின் கடுமையான நோய்த் தாக்கத்தை P. ஃபால்ஸிபாரம் நோய்த்தொற்று தான் அதிகமாக ஏற்படுத்துகிறது. வழக்கமாக நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு 6 முதல் 14 நாட்களில் இந்த நோய் தீவிரமடையும். ஆழ்மயக்கம் (கோமா) மற்றும் இறப்பு ஆகியவை மலேரியாவின் கடுமையான நோய் நிலையின் விளைவுகளாகும்.
- மலேரியா நோய்க்கு சிகிச்சை அளிக்கபடாவிட்டால் இளம் குழந்தைகளும் கர்ப்பிணிகளும் எளிதில் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. மண்ணீரல் பிதுக்கம் (மண்ணீரல் விரிவடைதல் (பெரிதாகுதல்), கடுமையான தலைவலி, பெருமூளைச்சிரையில் குருதியோட்டக்குறைவு ஏற்படுதல், ஈரல் பெருக்கம் (ஈரல் விரிவடைதல்), இரத்தசை சர்க்கரைக் குறைவு மற்றும் சிறுநீரக செயலிழப்புடன் ஈமோகுளோபின் நீரிழிவு ஏற்படலாம்.
- சிறுநீரக செயலிழப்பு கறுநீர்க்காய்ச்சலை ஏற்படுத்தலாம். இதன் காரணத்தினால் சிதைவடைந்த இரத்த சிவப்பணுக்களிலிருந்து ஹீமோகுளோபின் சிறுநீர் வழியாக வெளியாகும். மலேரியாவின் கடுமையான நோய் நிலை மிகவும் விரைவாக அதிகரித்து சில மணிநேரங்கள் அல்லது நாட்களுக்குள் மரணத்தை ஏற்படுத்திவிடலாம். தீவிர பராமரிப்பு மற்றும் சிகிச்சையில் இருந்தும் கூட அதிகமான நேரங்களில் கடுமையான நோய் தாக்கம் இருக்கும் நோயாளிகள் மத்தியில் நோய் இறப்பு வீதம் 20 சதவீதத்திற்கும் அதிகமாகிவிடுகிறது. ஆண்டு முழுவதும் நோய் தோன்றும் பகுதிகளில் கொடுக்கப்படும் சிகிச்சை திருப்தியளிக்கக் கூடியதாக இல்லை. மலேரியாவின் மொத்த இறப்பு வீதம் 10ல் ஒன்றாக இருக்கலாம் (10 நோயாளிகளில் ஒருவருக்கு இறப்பு நேரிடுகிறது). நெடுங்காலமாக, மலேரியாவின் கடுமையான நோய் நிலையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் வளர்ச்சி ரீதியான குறைவுகள் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன.
- P. விவக்ஸ் மற்றும் P. ஓவலே ஆகிய இரண்டிலும் நாட்பட்ட (நீண்ட கால) மலேரியா தாக்கம் காணப்படுகிறது. ஆனால் P. ஃபால்சிபாரத்தில் இது போன்ற நோய்த் தாக்கம் இல்லை. கல்லீரலில் ஒட்டுண்ணிகள் மறைந்திருப்பதன் காரணத்தினால், நோய் தாக்கம் ஏற்பட்டு மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நோய் மறுபடியும் ஏற்படலாம். இரத்த ஓட்டத்தில் ஒட்டுண்ணிகள் மறைந்துவிட்டதை பார்த்துவிட்டு மலேரியாவின் நோய் குணமாகிவிட்டது என்று விவரிப்பது தவறாக இருக்கலாம். P. விவக்ஸ் நோய்த்தொற்றின் மிகவும் நீண்ட நோய்காப்பு காலம் 30 வருடங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிதமான காலநிலையுள்ள பகுதிகளில் தோராயமாக 5 P. விவக்ஸ் மலேரியா நோயாளிகளில் ஒருவருக்கு ஹிப்னோசோயட்டுகளால் பொறுத்திருந்து தாக்குதல் ஏற்படுகிறது (அதாவது கொசு கடித்த பிறகு உள்ள ஆண்டிலிருந்து நோய் மறுபடியும் வர ஆரம்பிக்கும்).
காரணங்கள்
மலேரியா ஒட்டுண்ணிகள்
- பேரினம் பிளாசுமோடியத்தின் முதற்கலவுரு ஒட்டுண்ணிகளினால் மலேரியா ஏற்படுகிறது. (தொகுதி அபிகாம்ப்லெக்ஃசா). P. ஃபால்சிபாரம் , P. மலேரியா , P. ஓவலே , P. விவக்ஃசு மற்றும் P. நோலெசி ஆகியவை மனிதர்களிடம் மலேரியா ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. நோய்த்தொற்று ஏற்பட மிகவும் பொதுவான காரணமாக இருப்பது
- P. ஃபால்சிபாரம் ஆகும். மலேரியா நோயாளிகளில் சுமார் 80 சதவீதமானோருக்கு மலேரியா நோய்த்தொற்று வர இது காரணமாக இருக்கிறது. மலேரியா நோயினால் இறப்பவர்களில் சுமார் 90% இறப்பிற்கு இது காரணமாக இருக்கிறது.[20] பறவைகள், ஊரும் விலங்குகள் (ஊர்வன), குரங்குகள், சிம்பான்சிகள் மற்றும் கொறிணிகள் ஆகியவைகளுக்கும் ஒட்டுண்ணி சார்ந்த பிளாசுமோடியம் இனங்கள் நோய்த்தொற்றை ஏற்படுத்துகின்றன.
- மலேரியாவின் பல சிமியன் இனங்கள் மனித நோய்த்தொற்றுகளுடன் தொடர்புடையதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன: P. நோலெசி , P. இனியு , P. சைனோமோல்கி , P. சிமியோவலே , P. பிராசிலியணம் , P. ஸ்கிவெட்ஸி மற்றும் P. சிமியம் ; எனினும், P. நோலெசியை தவிர மற்றவைகளுக்கு பொது சுகாதாரத்தில் குறைவான முக்கியத்துவமே பெரும்பாலும் கொடுக்கப்படுகிறது.
No comments:
Post a Comment